வவுனியா, பேராறு அணையின் கீழ் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவிப்பு

1 month ago



வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளமையால் அதன் 2 வடிகால்களும் 1 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.

இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கோரியுள்ளது.