யாழ்ப்பாணம் - மானிப்பாய் கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
5 months ago
யாழ்ப்பாணம் - மானிப்பாய் கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் தீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை எதிரில் வந்த கனரக வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மானிப்பாய் பொலிஸார் கனரக வாகனம் செலுத்தி சென்ற சாரதிக்கு பதிலாக வேறொருவரை கைது செய்து வழக்கினை திசை திருப்ப முற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.