கடந்த பதினொரு மாதங்களில் 2 ஆயிரத்து 937 சிறுவர் துஷ்பிரயோகங்கள்.-- இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தெரிவிப்பு

3 days ago



கடந்த பதினொரு மாதங்களில் 2 ஆயிரத்து 937 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என்று இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில், பாலியல் வன்புணர்வு தொடர்பில் ஆயிரத்து 526 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல் அல்லது தொந்தரவு தொடர்பில் 544 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மேல்மாகாணத்தில் 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.