வேலணையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு 52 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5 months ago


யாழ்.வேலணையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு 52 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேலணைப் பிரதேச காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் வேலணைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.

அரச காணிகளைப் பல்வேறு தேவைகளின் பொருட்டு நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேலணை உதவிப் பிரதேச செயலாளர், மாவட்டக் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர், பெரும்பாக அலுவலர், விவசாயப் போதனாசிரியர், குடியேற்ற உத்தியோகத்தர், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போதே அரச காணிச் சட்டம் பிரிவு 62 இன் கீழ் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு 52 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


அண்மைய பதிவுகள்