போலி உறுதி மோசடியில் ஈடுபட்டமைக்காக, யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நில அளவையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் மருதங்கேணியில் உள்ள தமது காணிக்கு ஆனைக்கோட்டையில் வசிக்கும் ஒருவருக்கு அற்றோனித் தத்துவம் வழங்கியிருந்தனர். அந்த அற்றோனித்தத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்திய அந்த நபர், தொடர்புடைய காணிக்கு அருகிலிருந்த காணிகளையும் அடாத்தாக ஆக்கிரமித்து பருத்தித்துறையைச் சேர்ந்த நில அளவையாளர் ஒருவர் மூலம் வரைபடம் கீறியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரசித்த நொத்தாரிஸ் ஒருவர் மூலம் பிறிதொருவருக்கு அந்தக் 'காணியின் அதிகாரம் கைமாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போலியாக உறுதி நிறைவேற்றப்பட்ட காணியின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேடகுற்ற விசாரணைப் பிரிவினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலி ஸார், அற்றோனித் தத்துவத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர், காணியை அளவீடு செய்த நிலஅளவையாளர் மற்றும் காணியின் அதிகாரம் இறுதியாக மாற்றப்பட்டவர் ஆகிய மூவரையும் கைதுசெய்தனர். அவர்கள் நீதி மன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட போது, மூவரையும் கடுமையாக எச்ச ரித்த நீதிவான் அவர்களைப் பிணை யில் செல்ல அனுமதித்ததுடன் வழக் கைத் தவணையிட்டார்.