வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி நாடு தழுவிய சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடத்துவோம் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள் ளார்.
மட்டக்களப்பு - ஏறாவூர் அல்-முனீரா மகளிர் கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை அன்பளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த இரு மாகாணங்களிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும்
ஆயுதத் தரப்பினர் என சமூகத்தில் பல தரப்பினர் வாழ்ந்து வருகின்றனர்.
போருக்குப் பின்ன ரான காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றி ணைந்து இலங்கையர்க ளாக நாம் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண் டும். பிரிவினையை தொடர்ந்தால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்றார்.