
காசாவில் மூன்று இஸ்ரேலிய கைதிகளான அலெக் சாண்டர் ட்ருஃபனோவ், சாகுய் டெக்கல் சென் மற்றும் யைர் ஹார்ன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் 369 பலஸ்தீனர்களை இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து ஹமாஸ் அமைப்பு அடுத்த வாரம் இஸ்ரேலுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 48,239 பேர் இறந்ததாகவும், 111,676 பேர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோர் இப்போது இறந்துவிட்டனர் என கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
