தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் மன்ற கூட்டம்.-- யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் மன்ற கூட்டமொன்று அதன் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.
பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப் பொருளில் இந்த மக்கள் மன்றம் நடைபெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சுயேச்சைக் குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் வி. மணிவண்ணண், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என். சிறீகாந்தா ஆகியோர் அரசியல் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.
சிவில் சமூகம் சார்பில் ஜெயக்குமார் அடிகளார், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல்துறை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரன், சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.