கனேமுல்ல சஞ்சீவ்வை சுடுவதற்கு நீதிமன்றத்துக்குள் சென்ற துப்பாக்கிதாரிக்கு உதவி செய்தார் எனக் கூறப்படும் பெண்ணின் படங்களை வெளியிட்டு கைது செய்ய மக்களின் உதவியை நாடிய பொலிஸார்




பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கனேமுல்ல சஞ்சீவ என்பவரைச் சுட்டுப் படுகொலை செய்வதற்குக் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்ற துப்பாக்கிதாரிக்கு உதவி செய்தார் எனக் கூறப்படும் பெண் சந்தேகநபரான செவ்வந்தியின் புதிய புகைப்படங்களைக் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் வெளியிட்டுள்ளதுடன் அவரைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
பெண் சந்தேகநபர், இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம என்ற முகவரியில் வசிக்கும் 25 வயதான பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது தேசிய அடையாள அட்டை எண் 995892480 ஆகும்.
சட்டத்தரணி போல் நடித்த செவ்வந்தி, நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு ரிவால்வரை கடத்தி வந்து கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் 071-8591727 அல்லது 071-8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளார் என்று பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தகைய தகவல்களை வழங்குபவர்களின் அடையாளம் கண்டிப்பாக இரகசியமாக வைக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
