இலங்கை பாகிஸ்தானுக்கு இடையிலான தொடர்புகளை கொண்டாடும் முகமாக நினைவு முத்திரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்.--

2 months ago




இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை கொண்டாடும் முகமாக நினைவு முத்திரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல்திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

2022இல்இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திரத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 02 நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு இரு தரப்பினரும் உடன்பாடு        தெரிவித்துள்ளனர்.

அதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான் அஞ்சல் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு              ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்      பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த                   யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது-என்றார்.