யாழில் பிறந்து ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

5 months ago


யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே நேற்று (07.04.2024) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குழந்தையின் தாயார் நேற்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். பின்னர் குழந்தை அதிகாலை 4 மணிக்கு மயக்க நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து, அளவெட்டி வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றவேளை, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை அனுப்பி வைத்த போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.