இலங்கை இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில்.- ஜனாதிபதி தெரிவிப்பு
3 months ago

இலங்கை இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, திருடப்பட்ட ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாகவும், எஞ்சிய துப்பாக்கிகள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 13 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு துறைகளில் பரவலான சீர்கேட்டை உருவாக்கியதற்காக முன்னைய நிர்வாகத்தை விமர்சித்த ஜனாதிபதி, இது தற்போதைய பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
