கடந்த 12 நாளில் மட்டும் 2058 பேருக்கு கண்புரை (கற்றாக்) சத்திர சிகிச்சை, யாழ். போதனா மருத்துவமனை சாதனை


கடந்த 12 தினங்களில் மட்டும் 2 ஆயிரத்து 58 பேருக்கு கண்புரை (கற்றாக்) சத்திர சிகிச்சைகளை செய்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம், வடக்கு மாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகியுள்ளதாக யாழ். போதனா மருத்துவமனையின் கண் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக பார்வை தினத்தை ஒட்டி கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான 12 தினங்களில் மட்டும் இந்த கண்புரை சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நாட்களில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட 136 பேருக்கும் வவுனியா பொது மருத்துவமனை மூலம் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்து 431 பேருக்கும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் பதிவு செய்த 300 பேருக்கும் மன்னார் பொது மருத் துவமனையில் பதிவு செய்த 108 பேருக்கும் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் பதிவு செய்த 83 பேருக்கும் கண்புரை சத்திர சிகிச்சை யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரையான காலத்தில் 14 ஆயிரத்து 685 பேர் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அதிகளவு கண்புரை சத்திர சிகிச்சைகளை நடத்தும் மையம் என்ற பெருமையை யாழ். போதனா மருத்துவமனையை பெற்றுள்ளது.
மேலும், இந்த கண்புரை சத்திர சிகிச்சைகள் மூலம் வடக்கு மாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகியுள்ளது.
அத்துடன், வடக்கில் கண்புரை சத்திர சிகிச்சைக்கான காத்திருப்பு காலம் 3 வருடங்களிலிருந்து ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று முதல் கண் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
