கனடாவில் மூலதன ஆதாய வரி அறவீடு நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதமர் நாடாளுமன்றை ஒத்திவைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் மூலதன ஆதாயவரி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் இந்த மூலதன ஆதாய வரி நடைமுறையை அறிமுகம் செய்திருந்தது.
இதன்படி வருமான வரி திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கனடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டரை லட்சம் டொலர்களுக்கு மேல் மூலதன ஆதாய வருமானத்தை ஈட்டுபவர்கள் இந்த வரி விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த வரி அறவீட்டு நடைமுறை அமுலில் இருக்கும் என கனடிய நிதி திணைக்களம் தெரிவித்துள்ளது.