சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

4 months ago


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அகிலன் முத்துக்குமாரசாமி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான மயூரன், சுதர்சன், மாவை சேனாதிராஜா கலையமுதன், குணாளன் ஆகியோரே இக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விரிவான பேச்சில் ஈடுபட்டதாகவும் விசேடமாக சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்ததாகவும் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் அணியினர் அறிவித்த நிலையில் அக்கட்சியின் குழுவினர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்