புலிகளுக்கு ஜே.வி.பி ஆயுதம் வழங்கவில்லை

6 months ago

விடுதலைப் புலிகளுக்கு ஜே.வி. பி.யினர் ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் 

பிள்ளையானால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம் என்று ஜே.வி.பி.யின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நலிந்த ஜயதிஸ்ஸ நேற்றுத் தெரிவித்தார்.

1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு ஜே.வி.பி.யினர் ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் பிள்ளை யான் அண்மையில் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் ஒரு வர் கேள்வி எழுப்பியபோதே, பிள்ளை யானின் குற்றச்சாட்டை மறுப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததா வது:-

இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின் றோம். இதற்குப் பதிலளித்தும் பயன் இல்லை. தேசிய மக்கள் சக்தியுடன் முப் படைகளில் இருந்து ஓய்வுபெற்ற அதிகா ரிகள் இணைந்துவருகின்றனர். அதே போல ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களும் இணைந்து செயற்படுகின் றனர். இவ்வாறு நாட்டைப் பாதுகாத்த படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் நாம் பயணிக் கின்றோம்.

ஆனால், கருணா அம்மான், பிள்ளை யான் போன்றோரை இணைத்துக் கொண்டு ரணில் செயற்படுகின்றார். அவரின் ஆலோசனையின் பிரகாரம் தான் பிள்ளையான் அந்தக் கதையைக் கூறியிருக்கலாம். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளை யானுக்கு எதிராகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும்.

பிள்ளையான், கருணா அம்மான் போன் றோரை இணைத்துக்கொண்டு ரணி லால்தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நிறுத்தமுடியாது. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொலை,கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்கள் தொடர் பிலும் எமது ஆட்சியில் விசாரிக்கப்படும் என்றார்.


அண்மைய பதிவுகள்