இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வரவேற்கிறோம். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

5 months ago


இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

இது ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் அவர்களை வலுப்படுத்தும் நீதியான சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்