யாழில் கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் இளைஞர்கள் இருவரை குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

3 months ago


கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் இளைஞர்கள் இருவரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் மானிப்பாயைச் சேர்ந்த 18, 24 வயது இளைஞர்களாவர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்களில் ஒருவர் நவாலி பகுதியிலும் மற்றையவர் மட்டக்களப்பு பகுதியிலும் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களைக் கைது செய்த போது அவர்களிடமிருந்து, 2 கைக்குண்டுகள், 4 வாள்கள், 4 பெற்றோல் குண்டுகள், 2 இரும்பு குழாய்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

கைதான இருவரும் அண்மையில், நெல்லியடியில் வர்த்தக நிலையம் ஒன்று எரிக்கப்பட்ட சம்பவம் உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் சட்டநடவடிக் கைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


அண்மைய பதிவுகள்