கனடாவில் சம்சுங் ரக இலத்திரனியல் அடுப்புக்களை சந்தையில் இருந்து மீளப் பெற முடிவு.

4 months ago


கனடாவில் சம்சுங் ரக இலத்திர னியல் அடுப்புக்கள் தொடர்பில் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடுப்பு வகையை பயன் படுத்தும் மக்கள் தீ விபத்துக்கு உள்ளாவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவில் சில அடுப்புகளில் தன்பாட்டில் தீப்பற்றி கொண்டதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

சுகாதார நிறுவனம் இந்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 3,26,250 அடுப்புக்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்குகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அடுப்புக்களின் எரியும் பகுதி தானாக இயங்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ பற்றிக் கொள்வதைத் தவிர்க்கும் நோக்கில் சம்சுங் நிறுவனம் வாடிக் கையாளர்களுக்கு விசேட கருவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுப்புக்கள் தானாக தீப்பற்றி கொண்ட 57 சம்பவங்கள் பதிவாகி யுள்ளன. விபத்துக்கள் காரணமாக ஏழு பேர் இதுவரையில் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய பதிவுகள்