ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது பாரியார் சகிதம் வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவித்தன.
அவரும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது.
அத்துடன் வெற்றி பெறும் வேட்பாளரிடம் அதிகாரத்தை சுமூகமாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத் துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட கோவைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.