மாமனிதர் சிவராமை வீழ்த்திய கொலையாளிகள் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என Sunday Times அம்பலப்படுத்தியிருந்தது. இன்றும் தீர்வில்லை.
ஜே.வி.பி மீள் விசாரணைக்கு தெரிவு செய்துள்ள ஏழு குற்றம் வழக்குகளில் மாமனிதர் சிவராம் அவர்கள் கொலை வழக்கும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது
மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) அவர்கள் கடத்தப்பட்டு ஏப்ரல் 28, 2005 அன்று கொலை செய்யப்பட்டார்.
மாமனிதர் சிவராம் அவர்களை வீழ்த்திய கொலையாளிகள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என Sunday Times அம்பலப்படுத்தியிருந்தது.
குறிப்பாக புளொட் தலைவர் சித்தார்த்தன் (சங்கு சின்னத்தை அபகரித்த தரப்பு) அவர்களின் பெயரில் பதியப்பட்டிருந்த வாகனமே கொலையில் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதையும் Sunday Times வெளிக்கொண்டு வந்திருந்தது.
இது தவிர சிவராம் கொலை தொடர்பாக விசாரணைகளில் அவரின் கைத்தொலைபேசி SIM உம் இனங்காணப்பட்டது.
இதனடிப்படையில் கொழும்பில் புளொட் அலுவலகத்தைச் சுற்றி வளைத்த பொலிசார் அங்கு ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) மற்றும் வேலாயுதன் நல்லநாதா ஆகிய புளொட் உறுப்பினர்களை கைதும் செய்தனர்.
இதில் பீற்றர் புளொட் அமைப்பின் கொழும்பு அமைப்பாளராகவும், சித்தார்த்தனின் உதவியாளராகவும் அடையாளம் காணப்பட்டு இருந்தார்
ஆனால் புளொட்,டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் சகிதம் அரச புலனாய்வு கட்டமைப்பில் குறித்த காலத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததால் போதிய முகாந்திரம் இருந்தும் சித்தார்த்தன் விசாரிக்கப்படாமலேயே வழக்கு கைவிடப்பட்டது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு புளொட் உறுப்பினர்களும் கூட விடுவிக்கப்பட்டனர்.
இப்போது ஜே.வி.பி யால் இவ் வழக்கு மீண்டும் பேசு பொருளாகியிருக்கின்றது.
லசந்த விக்கிரமதுங்க , பிரதீப் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, வாசிம் தாஜுதீன் மரணம், வெள்ளை வான் கடத்தல்கள் உட்பட பல்வேறு High Profile வழக்குகள் குறித்து அமைதியாக கடந்து போகும் சம நேரத்தில் வெறும் ஏழு வழக்குகளை மட்டும் தூசி தட்ட முயற்சிக்கும் ஜே.வி.பி யின் நோக்கம் குறித்து பல்வேறு மட்டங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
எப்படியிருந்தாலும் ஊடகவியலாளர் சிவராம் அவர்களை கொன்ற கொலை சந்தேக நபர் சித்தார்த்தன் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டிய நபர் ஆவர்.
தமிழ்த் தேசத்தின் புலமை சொத்தாகவிருந்த சிவராம் அவர்களை வீழ்த்தியவர்களை ஒரு போதும் மன்னிக்க முடியாது .
சிவராம் களத்திலிருந்து அகற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட அவரின் ஊடகவியல் வெற்றிடத்தை தமிழர்களால் நிரப்ப முடியவில்லை என்பதே அவரின் பெறுமதிக்கு சான்றாக இருக்கின்றது.