

வவுனியா ஓமந்தையில் ஏ-9 யாழ். -கொழும்பு பிரதான வீதி நேற்று வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வாகனச் சாரதிகள், கெப்பிற்றிக் கொலாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்றுப் பாதைகளில் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் நேற்றுக் காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்தது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
