அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணிகள் நடைபெற்றன.
பணிக்குழுவினர், மாவீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்களின் பங்களிப்பில் இந்தத் துயிலும் இல்லம் துப்புரவு செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமாக கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லம் உள்ளது.
தமிழ் மக்களின் இன விடுதலைப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.