இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதுவர் எரிக் வோல்ஸ் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம்.
2 months ago
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனைச் சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள், பிரச்னைகள் தொடர்பிலும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் கனடா தூதுவருக்கு விபரிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட தொழித் துறை அமைப்புப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.