நாசாவின் விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைக்க முயல்கிறது.
த பார்க்கர் சோலார் ப்ரோப் அதிக வெப்பநிலை மற்றும் தீவிர கதிர்வீச்சைத் தாங்கும் திறன் கொண்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விண்கலம் தமது பயணத்தின் போது பல நாள்களுக்குத் தொடர்பை இழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் தகவல்கள் கிடைப்பதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் என நாசாவின் அறிவியல்துறைத் தலைவர் நிக்கோலா ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.