கொழும்பு - லண்டன் இடையிலான விமானப் பாதையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மாற்றம் செய்துள்ளது.
6 months ago

கொழும்பு - லண்டன் இடை யிலான விமானப் பாதையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மாற்றம் செய்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈராக் வான்பரப்பை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து லண்டனுக்கான விமானங்கள் எகிப்து வான்வெளி ஊடாகவே இனி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விமான பயணத்தின் நேரம் அண்ணளவாக 30 நிமிடங்கள் அதிகரிக்கும்.
இதன்படி எரிபொருள் பாவனையும் அதிகரிக்கும் - என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
