தென்கொரிய விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது உள்ளே இருந்த பயணி எக்சிட் கதவை திறக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் ஏர் விமானமே KE658 பயணிகளுடன் கிளம்பியது.
அப்போது பயணி ஒருவர் எக்சிட் கதவுக்கு அருகே ஊழியர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அவரை அங்கிருந்து எழுந்து அவர் புக் செய்த சீட்டுக்கு போக விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அங்கிருந்த செல்ல மறுத்த அந்த நபர் திடீரென எக்சிட் கதவை நெருங்கி அதை திறக்கப்போவதாக கத்தி கூச்சல்போட்டு ஊழியர்களையும், சக பயணிகளையும் மிரட்டியுள்ளார்.
ஆனால் தரையிறங்கும் வரை நிலைமையை சமாளித்த ஊழியர்கள், விமானம் சியோலில் பாதுகாப்பாக தரையிறங்கியவுடன் இன்சியான் சர்வதேச விமான பாதுகாப்பு படையினரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.
பயணி விமானத்தில் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.