யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
15 hours ago
யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரில் இருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம், பலாலியில் இருந்து ஏழாலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் (60 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து ஹயஸ் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.