இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடத்தும் "யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2024" நேற்று ஆரம்பமாகியது.
குறித்த போட்டி எதிர்வரும் டிசெம்பர் 4 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கொக்குவிலில் இடம்பெறுகிறது.
இப்போட்டியில் சுமார் 750 இற்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.
இவர்கள், இந்தியா, பிரித்தானியா மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டுள்ளனர்.
இப்போட்டியில் சுமார் 24 இலட்சம் ரூபா பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பரிசு 150 இற்கு மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இரண்டாவது சர்வதேச சதுரங்க போட்டியாகும்.
இன்றைய தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் நா.வேத நாயகம் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.