
கனடிய மற்றும் அமெரிக்க எல்லைப் பகுதிகளை கடப்பது தொடர்பான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் இந்த மாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
எதிர்வரும் ஆண்டு முதல் கனடிய அமெரிக்க எல்லைப் பகுதிகள் பலவற்றின் ஊடாக எல்லைகளையே கடக்க முடியும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எல்லைகளை கடப்பதற்கான நேரங்களில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து இந்த நேர மாற்றத்தை அமுல்படுத்த உள்ளதாக கனடிய எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சன நெரிசலை தடுக்கவும் சிறந்த சேவையை வழங்கவும் இவ்வாறு எல்லைப் பகுதிகளில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை காரணமாக சட்டவிரோத குடியேறிகள் நாடுகளை கடப்பது தடுக்கப்படும் என கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
