வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவருக்கும் பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
2 months ago
வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவருக்கும் பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று 02.11.2024 இடம்பெற்றது.
தமிழ்நாடு பாண்டிச்சேரி அரசின் சுற்றுலாத்துறை ஒன்றிய அமைச்சருக்கும் வடமாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் சு.சுதர்சனுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை பாண்டிச்சேரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் நட்பு ரீதியான சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் இலங்கை இந்திய சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை பார்வையிடுவதற்கான சுற்றுலா ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் சுற்றுலா தொடர்பான விளக்க கையேடு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.