இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் 400 ஏவுகணைகளை வீசி தாக்குதல், இதனால் இலட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

3 months ago


இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் 400 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல் அவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறி வைத்து வீசப்பட்ட இந்த ஏவுகணைகளால் அங்குள்ள இலட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் ஏவுகணைகளை                வழியிலேயே தடுத்து அழிக்கும். பொருட்டு அதிநவீன கருவிகள்  தயாராக இருப்பதாக இஸ்ரேல்  இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

இஸ்ரேலியர்கள் விழிப்புடன் இருக்கவும், அரசின் உத்தரவுகளை சரியான முறையில் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேல் இராணுவம் செய்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும், இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

அண்மைய பதிவுகள்