கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவர் கைது.

4 months ago


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை யின் வருமான வரி உத்தி யோகத்தர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இலஞ்சம் பெற்று வருகின்றனர் என்று இலஞ் சம், ஊழல் தடுப்பு ஆணைக் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொழும்பிலிருந்து கிளிநொச்சி வந்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

உருத்திரபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரும் ஆணைக்குழு அதிகாரிகளால் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இரு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்ட தகவலை கரைச்சி பிரதேச சபை செயலாளர் உறுதிப் படுத்தியுள்ளார்.