

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோ மெஸ்ஸி தன்னுடைய கையில் ஒரு 6 மாத குழந்தையை வைத்து புகைப்படத்துக்கு காட்சி தந்து இருப்பார்.
ஒரு மிகப்பெரும் கால்பந்து நட்சத்திரத்தின் கைகளில் தவழ்ந்தாலோ என்னமோ அந்த குழந்தை இப்போது சிறுவனாகி தன்னுடைய 16 வயதிலேயே ஸ்பெயின் கால்பந்து அணியில் இடம் பிடித்து விட்டான்..!!
இப்போது விஷயத்துக்கு வருவோம் நேற்று நடந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டமொன்றில் ஸ்பெயின் அணியும் வலிமை மிகுந்த பிரான்ஸ் அணியும் மோதியது இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 2.1என்கிற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் நுழைந்தது இதில் ஒரு கோலை அடித்து பிரான்ஸ் அணியை வீட்டுக்கு அனுப்பி வைக்க காரணமாக இருந்தது நான் மேலே குறிப்பிட்டு இருந்த மெஸ்ஸியின் கைகளில் அப்போது 6 மாத குழந்தையாக தவழ்ந்து இப்போது 16 வயது சிறுவனாகி சிறந்த கால்பந்து வீரனாகி ஸ்பெயின் கால்பந்து அணியை பிரதிபலித்து கொண்டிருக்கும் Lamine Yamal தான் அந்த குழந்தை..!!
தற்போது உலகின் மிக இளம் வயது கால்பந்து வீரரும் இவரே..
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
