ஜனாதிபதியும் நீதியமைச்சரும் உயர்நீதிமன்றத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றிணைவு என்ற சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது
ஜனாதிபதியும் நீதியமைச்சரும் சமீபத்தில் உயர்நீதிமன்றத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் நீதித்துறையை அச்சுறுத்தும் தன்மை கொண்டவை என்று இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றிணைவு என்ற சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பால்நிலை சமத்துவ சட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துகளும் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துகளும் நீதித்துறையை அச்சுறுத்தும் தன்மை கொண்டவை என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நீதியமைச்சர் கல்வியமைச்சர் ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையான பிரதிநிதிகள். உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கும் முக்கிய அரசமைப்பு அதிகாரம் மற்றும் பொறுப்பை ஜனாதிபதி செயற்படுத்துகின்றார் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் நீதித்துறையின் வளங்களை கட்டுப்படுத்துகின்றார் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி உயர் நிறைவேற்று அலுவலகம் நீதித்துறை குறித்து நயவஞ்சகமான கடுமையான கருத்துக்களை வெளியிடுவது தெளிவான அதிகார துஸ்பிரயோகமாகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
