தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நேற்றைய தினம் (14) அவனியாபுரத்திலும் இன்று (15) பாலமேட்டிலும் நடந்தது. நாளை(16) அலங்கா நல்லூரில் நடைபெறவுள்ளது.
மருத்துவ பரிசோதனை காரணமாக, காலை 7.00 மணி அளவில் தொடங்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி, 7.30 மணி அளவில் தொடங்கியுள்ளது.
அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் நிகழ்வாக, 7 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.
பின்னர், அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில், 1100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
வெற்றி பெறுபவர்களுக்கு தங்க, வெள்ளி, நாணயங்கள், சைக்கிள், அண்டா, TV என பல பரிசுகள் காத்திருக்கிறது.
சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்படுகிறது.
சிறந்த காளைக்கு முதலமைச்சர் சார்பில் உழவு இயந்திரம் பரிசு கொடுக்கப்பட இருக்கிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு களம் நீளமானது என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், பாதுகாப்பு பணிக்காக 2500 பொலிஸார் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக , கொம்பு கூர்மையாக உள்ளதா? , கொம்பில் இரசாயனம் பூசப்பட்டுள்ளதா?, என காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
காளைகளுக்கு போலி டோக்கன் வழங்குவதை தடுக்க QR கோடு முறை பயன்படுத்தப்பட்டது.
4820 காளைகளை ஆய்வு செய்ததில் 1100 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
காளைகளை பரிசோதனை செய்ய 110 கால்நடை தத்தியர்கள் களத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.