ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல்

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரியில் அமைந்துள்ள சசிகலாவின் வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் சசிகலா, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சசிகலாவின் வீட்டுக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினாலாயே இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அந்தப் பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றார்.எனவும் வேட்பாளர் சசிகலா சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
