கூட்டணி என்பது தனது கோட்பாட் டில் இல்லை. திராவிடக் கட்சிகளுடன் தன்னால் ஒருபோதும் கூட்டணி அமைக்க முடியாது." - இவ்வாறு என நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திராவிடக் கட்சிகளுடன் ஒருவேளை கூட்டணி அமைந்தால், அது மாற்றாக இல்லாமல், ஏமாற்றமாக இருக்கும் என்றும் சென்னையில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்
அத்துடன், நாகரிக அரசியல் தெரி யாத தி.மு.க. இழிவாகப் பேசுவதற்கு என்றே பேச்சாளர்களை வைத்திருந்ததாகவும், தற்போது நாம் தமிழர் கட்சியினர் சாதி அடிப்படையில் கருத்துக் கூறிவருகின்றனர் என குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குடிப்பெருமை பேசுவ தாக தன்னை விமர்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.கவிடம் இருந்து ஒரு பொது தொகுதியைக்கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றார்.
ஆனால்.. 16 பொதுத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட தன்னை சாதிப் பெருமை பேசுவதாகக் விமர்சிக்கின்றார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்