முல்லைத்தீவு உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்த தயாராக இருந்த 6 இளைஞர்கள் கைது.
முல்லைத்தீவு உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை இந்த கைது சம்பவம் இடம் பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் சார்ஜன்ட் குண வர்த்தனவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் குழுவினர் கைது நட வடிக்கையை மேற்கொண்டனர்.
குறித்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், 17,000 ரூபா பணம் என்பவற்றுடன் 7 சிறு சிறு பொதிகளில் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் உடையார்கட்டு குரவில் பகுதியை சேர்ந்த நால்வர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இருவர் என 17, 18,18,21,23,24 வயதுடைய இளைஞர்கள் 6 பேரை புதுக்கு டியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.