இராணுவம் அபகரித்த காணிக்குள் குடிதண்ணீர் கிணறு இருப்பதால் குடிதண்ணீரைப் பெறுவதில் பூநகரி அரசபுரத்து மக்கள் சிரமம்
2 weeks ago
இராணுவம் அபகரித்த காணிக்குள் மக்களின் குடிதண்ணீர் கிணறு இருப்பதால் குடிதண்ணீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கிளிநொச்சி, பூநகரி அரசபுரத்தில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அந்தப் பகுதி மக்களின் குடிதண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொதுக்கிணறு தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் 4 மணிமுதல் 5 மணிவரை இராணுவ முகாமின் வாசலில் நீர் கொள்கலன்களை அடுக்கி வரிசையில் நின்று குடிதண்ணீர் பெற வேண்டியிருக்கின்றது.
ஒரு நாளுக்கு 20 லீற்றர் குடிதண்ணீர் மட்டுமே ஒன்றுக்கு வழங்கப்படுவதால், குடிதண்ணீருக்கு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது-என்றனர்.