வவுனியா ஒமந்தை - பாலமோட்டை குளம் உடைப்பு: 82 ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியது

1 month ago

வவுனியா ஒமந்தை - பாலமோட்டை குளம் உடைப்பு: 82 ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியது



வவுனியா ஒமந்தை, பாலமோட்டைபகுதியில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் உடைப்பெடுத்தமையால் இக்குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது.

வவுனியாவில் தொடந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஓமந்தை, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மடத்து விளாங்குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அக் குளத்தின் கீழான 82.84 ஏக்கர்      விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளதுடன். அப் பகுதிக்கான வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

இந்தக் குளமானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்துள்ளது,

விவசாயிகளே சிறிய திருத்த வேலைகளை கடந்த காலத்தில் செய்திருந்தனர்.

தற்போது குளம் உடைப்பெடுத்து பாய்ந்து வருவதனால் அதன் கீழான நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.

குறித்த குளத்தின் உடைப்பை கட்டுப்படுத்த இராணுவத்தினர் கமக்கார அமைப்பினருடன் இணைந்து முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை.

தண்ணீர் தொடர்ந்தும் வெளியேறி வருகின்றது.

அண்மைய பதிவுகள்