மியன்மார் அகதிகளுடன் முல்லைத்தீவு கடற்பரப்புக்குள் பிரவேசித்த படகின் மாலுமிகளுக்கு விளக்கமறியல்

2 weeks ago



முல்லைத்தீவில் 103 மியன்மார் அகதிகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த படகின் மாலுமிகள் 12 பேர் டிசெம்பர் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

படகில் வந்த அகதிகள் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் அகதிகளுடன் பயணித்த மீன்பிடி படகொன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியை நேற்று முன்தினம் வந்தடைந்தது.

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மியன்மார் அகதிகள் நேற்று காலை திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அண்மைய பதிவுகள்