யாழ்.காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகிறது.
2 months ago

யாழ்.காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் நாளை புதன் கிழமை ஆரம்பமாகிறது.
சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன் துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தைச் சென்றடையும்.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்து வாரத்தில் 6 நாட்கள் சேவையில் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
