
மியன்மாரில் யாகி புயல் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 226 ஆக அதிகரித்தது.
தென்சீனக் கடலில் உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளை கடுமையாக தாக்கியது.
இந்தப் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டிப்போட்டு சென்றது.
இந்த நிலையில், மியன்மாரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியா னோர் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்தது. 77 பேர் காணா மல் போயுள்ளதாக அரசு ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, யாகி புயலால் வியட்நாமில் 300 பேரும், தாய் லாந்தில் 42 பேரும், லாவோ சில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
