கல்விக்காக குறைந்தளவு தொகையை செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடத்தில் காணப்படுவதாக பப்ளிக் பைனானஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.
ஹய்டி மாநிலம் மற்றும் லாவோஸ் இலங்கையை விட குறைவாக கல்விக்கு செலவழிப்பதாகவும், இந்தப் பட்டியலில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் அவ்விரண்டு நாடுகளும் காணப்படுகின்றன.
கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பாலான பகுதியை செலவழித்த அபிவிருத்தி குன்றிய நாடுகளாக சியாரா லியோன், மாலி, உகண்டா ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும், இலங்கை கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 1.5 வீதத்தை மாத்திரமே எனவும் இதனால் இது மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் இணையத்தளம் குறிப்பிடுகின்றது.
கல்விக்காக செலவழிப்பது பொருளாதார அபிவிருத்திக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுவதுடன் கல்விக்கு செலவழிக்காமல் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது எனவும் இணையத்தளம் சுட்டிக் காட்டியுள்ளது.