பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகி 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

1 month ago



பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம், சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது நாளாகவும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளித் தொகுப்பு ஒன்றில் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் கருத்து வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.