
கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரத்து 836 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
1 இலட்சத்து 85 ஆயிரத்து 162 ஆண் தொழிலாளர்களும் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 674 பெண் தொழிலாளர்களும் இவ்வாறு தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
