பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்க அமைச்சரவை அங்கீகாரம்
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை சமோஆவின் தலைநகர் ஆபியாவில் நடைபெறுகின்றது. "சவால்களுக்கு முகங் கொடுக்கக் கூடிய எதிர்காலம்: ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு" எனும் தொனிப்பொருள் இம்முறை அரச தலைவர்கள் மாநாடு நடைபெறுகின்றது.