தனியார் வைத்தியசாலை நோயாளர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சிகிச்சையளிப்பதால், தாம் பாதிக்கப்படுவதாக கிராமப்புற மக்கள் விசனம் தெரிவிப்பு.
தனியார் வைத்தியசாலை நோயாளர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சிகிச்சையளிப்பதால், தாம் பாதிக்கப்படுவதாக கிராமப்புற மக்கள் விசனம் தெரிவிப்பு.
தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்கள் விசேட வைத்திய நிபுணர்கள் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு விசேடமாக பார்வையிடும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
நேற்று முன்தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சிகிச்சைப் பிரிவில் இச்சம்பவம் தொடர்பில் அவதானித்த நோயாளர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.
விசேட வைத்திய நிபுணரிடம் காண்பிப்பதற்காக தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்கள் இவ்வாறு வரிசை நடைமுறையை பின்பற்றாது அழைக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிகிச்சைக்காக தூர இடங் களிலிருந்து கிளிநொச்சி வைத் தியசாலைக்கு சென்ற மக்கள், போக்குவரத்து உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வெளிநோயாளர் பிரிவில் நீண்ட வரிசையில் நின்ற பின், கண் சிகிச்சை பிரிவிற்கு அனுப் பப்படுகின்றனர். மீண்டும் அங்கு தொடர் இலக்கங்கள் வழங்கப்படுகிறது.
ஆனால், குறித்த வரிசை நடைமுறையை பின்பற்றாது, தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்தவர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படுகின் றனர்.
அவர்களுக்கு முன்னுரிமைய ளிக்கப்பட்டு வைத்தியர்கள் பார்வையிடுகின்றனர். சிகிச் சைக்காக சென்ற நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், தூர இடங்களிலிருந்து செல்லும் ஏழை நோயாளர்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகம்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலை கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.இதனால் அப்பாவி ஏழைகள்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.