அமெரிக்காவின் (US) டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் (US) டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் தனது மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா என்ற தம்பதியினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தின் போது, தமிழ் குடும்பம் பயணித்த காரில் இருந்தவர்கள் மற்றும் மற்றைய வாகன ஓட்டுநர் உட்பட மொத்தம் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அதே குடும்பத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் காரில் பயணிக்காத நிலையில் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.
இருப்பினும், சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அதிகாரிகளால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
